அமெரிக்காவை குறைகூறும் சீனா

பெய்ஜிங்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் வர்த்தகப் பூசல் நீடிக்கும் வேளையில் சீனா மீது அமெரிக்கா கூறிய குற்றச்சாட்டு பூசல் அதிகரிக்க வழிவிட்டுள்ளது.

சீனா அதற்கு சாதகமாக நியாயமற்ற முறையில் நாணயத்தை பயன்படுத்தும் நாடு என்று அமெரிக்கா அறிவித்த மறுநாள் அமெரிக்காவை கடுமையாகச் சாடியுள்ளது சீனா. “அனைத்துலக ஒழுங்கை அமெரிக்கா வேண்டுமென்றே சீர்குலைக்கிறது’ என்று சீனாவின் அதிகாரபூர்வ கம்யூனிஸ்ட் கட்சி நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உலகில் நிலைத்தன்மை நீடிக்க முக்கிய பங்காற்றும் பொறுப்பு பெரிய நாடுகளுக்கு இருப்பதாகவும் ஆனால் அமெரிக்காவில் உள்ள சிலர் இதற்கு எதிர்மாறாக நடந்து கொள்வதாகவும் சீனாவின் மக்கள் நாளேடு அதன் தலையங்கச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் என்றும் இல்லாத அளவுக்கு சீனாவின் யுவான் நாணய மதிப்பு குறைந்துள்ளது. யுவான் நாணயத்தின் எதிர்கால மதிப்பு குறித்து தற்போது முன்னுரைப்பது மிகவும் சிரமம் என்று மக்கள் நாளேடு தெரிவித்துள்ளது.

சீனாவின் நாணய மதிப்பு குறைந்ததையடுத்து சீனா மீது குற்றம் சாட்டியது டிரம்ப் நிர்வாகம். சீனாவுக்கு நன்மை அளிக்கும் வகையில் அதன் நாணயத்தை அந்நாடு நியாயமற்ற முறையில் கையாளுவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நீடிக்கும் வர்த்தகப் பூசல் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே அமெரிக்காவும் சீனாவும் மாறி மாறி இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதித்து வருகின்றன.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் மோதல் போக்கு உருவாகியுள்ளது.

வர்த்தகப் பூசல் முடிவுக்கு வர உடன்பாடு காண வேண்டியதன் அவசியத்தை உலக நாடுகள் வலியுறுத்தி வரும் வேளையில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!