இனவாதக் கொடுமையால் மலேசிய மாணவி தற்கொலை: அமெரிக்க பல்கலைக்கழகத்திற்கு எதிராகக் குடும்பத்தார் வழக்கு

இனவாதக் கொடுமையால் மலேசிய மாணவி தற்கொலை: அமெரிக்க பல்கலைக்கழகத்திற்கு எதிராகக் குடும்பத்தார் வழக்கு

1 mins read
b5f1fa9c-d2e5-4e47-85c3-6621e3ccaa8e
-

உலகெங்கிலுமுள்ள சிறு பிள்ளைகளுக்கு உதவ விரும்பு, மருத்துவ உளவியல் ஆலோசனையில் முனைவர் பட்டக்கல்வி படித்துக்கொண்டிருந்தார் மலேசியரான குமாரி ஜெருஷா சஞ்சீவி.

ஆனால், அவர் பல மாதங்களாகக் கடுமையான இனவாதக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இதுபற்றி பல்கலைக்கழகத்தின் உளவியல் பிரிவும் எதுவுமே செய்யாத நிலையில், கொடுமையைத் தாங்கமுடியாமல் அவர் 2017ஆம் ஆண்டு தனது 24வது வயதில் தற்கொலை செய்துகொண்டார். இப்போது, அவரது குடும்பத்தினர் அமெரிக்காவிலுள்ள யூட்டா மாநிலப் பல்கலைக்கழகத்திற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர்.

குமாரி சஞ்சீவி தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி பலமுறை புகார் செய்திருந்தும் பல்கலைக்கழகம் எதுவும் செய்யவில்லை என்பதற்காக வழக்கு தொடுக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீன, இந்தியக் கலப்பினத்தவரான குமாரி சஞ்சீவியின் குடும்பத்தார் மலேசியாவில் வாழ்கின்றனர். அவர்கள் பல்கலைக்கழகத்திடமிருந்து நஷ்ட ஈடு கோருகின்றனர். எவ்வளவு தொகை கோரப்படுகிறது என்பது வெளியிடப்படவில்லை. குமாரி சஞ்சீவிவை மரணத்திற்கு இட்டுச்சென்ற இனவாதக் கொடுமைக்கு எதிராகப் பல்கலைக்கழகத்தின் உளவியல் பிரிவு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவரது காதலர் மேத்யூ பிரிக் கூறுகிறார். இவர், குமாரி சஞ்சீவியின் குடும்பத்தின் சார்பில் வழக்கைத் தொடுத்தார்.

மருத்துவ உளயிலலில் முதுநிலை பட்டம் பெற்ற குமாரி சஞ்சீவி, தற்கொலை செய்து கொள்வதற்கு எட்டு மாதங்களுக்கு முன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டக்கல்வியைத் தொடங்கினார்.