ஹாங்காங்கில் அமைதிப் பேரணி நடத்திய வழக்கறிஞர்கள்

ஹாங்காங்கில் அமைதிப் பேரணி நடத்திய வழக்கறிஞர்கள்

1 mins read
4a07c2ff-1b02-4023-84d8-4256b5d1c8d8
ஹாங்காங்கில் நேற்று அமைதிப் பேரணியில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள். படம்: ஏஎஃப்பி -

ஹாங்காங்: ஹாங்காங்கில் வழக்கறிஞர்கள் ஒன்றுதிரண்டு அங்கு நேற்று பேரணி ஒன்றை நடத்தினர்.

தற்போது அங்கு நிலவும் அரசியல் நெருக்கடியை அரசாங்கம் கையாண்ட விதம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளவும் சீர்திருத்தங்களைக் கொண்டுவரவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சிலவகையான குற்றங்கள் புரிவோரை சீனாவுக்கு நாடுகடத்தி அவர்களை விசாரிக்க வகைசெய்யும் சர்ச்சைக்குரிய மசோதாவை எதிர்த்து இரண்டு மாதங்களுக்குமுன் வழக்கறிஞர்கள் அமைதியான முறையில் பேரணி ஒன்றை நடத்தியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக, கறுப்பு உடை அணிந்தவாறு நேற்று 3,000க்கு மேற்பட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர். அதன்படி, இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடங்கிய அமைதிப் பேரணி, பிற்பகல் 1 மணிவாக்கில் ஜஸ்டிஸ் பிளேசில் முடிவுற்றது. 1997ஆம் ஆண்டு சீனாவிடம் ஹாங்காங் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, வழக்கறிஞர்கள் நடத்திய ஆறாவதும் ஆகப் பெரிய போராட்டமாகவும் இது கருதப்படுகிறது.

பிரிட்டனிடமிருந்து சீன நிர்வாகத்தின்கீழ் ஹாங்காங் வந்தபிறகு, இப்போதுதான் ஆகப் பெரிய நெருக்கடியை அது எதிர்கொள்வதாக ஹாங்காங், மக்காவ் விவகார அலுவலகத் தலைவர் ஸாங் ஸியாவ்மிங் கூறியிருக்கிறார்.

ஹாங்காங் விவகாரங்களை மேற்பார்வையிடும் உயர்மட்ட சீன அதிகாரிகளில் அவரும் ஒருவர்.

சீனா-வின் தெற்கு நக-ர-மான ஷென்-ஸென்-னில் அதி-கா-ரி-க-ளுடன் நேற்று நடை-பெற்ற சந்-திப்-புக்கு மத்-தி-யில் அவர் இக்கருத்-தைத் தெரி-வித்-தார்.