சீனாவுடனான நியாயமற்ற ஒப்பந்தங்களால் ஆபத்து: டிரம்ப்

சீனாவுடனான நியாயமற்ற ஒப்பந்தங்களால் ஆபத்து: டிரம்ப்

1 mins read
13acab0f-c0df-4d62-ae9b-2b08d9d58259
-

சீனாவின் மீதான தமது கடுமையான போக்கால் இறுதியில் அமெரிக்காவின் பொருளியல் பலனடையும் என்று அந்நாட்டின் அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். ஐ-போன் முதல் ராணுவக் கருவிகள் வரையிலான பொருட்களைத் தயாரிப்பதற்கான கணிமப் பொருட்களின் விற்பனையை மீட்கப்போவதாக சீனா கோடிகாட்டியதை அடுத்து திரு டிரம்ப்பின் கருத்துகள் வெளிவந்தன.

சீனா தனது நாணய மதிப்பை நேர்மையற்ற முறையில் மாற்றுவதாக அமெரிக்கா இவ்வாரம் திங்கட்கிழமை கூறியதை அடுத்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் மேலும் தீவிரம் அடைந்தது. எஞ்சியுள்ள 300 பில்லியன் டாலர் சீன இறக்குமதிகள்மீது 10 விழுக்காடு வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்கா தெரிவித்தது.

இந்த முடிவால் உலகளாவிய பொருளியல் மந்தநிலை ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவிடமிருந்து எந்த வேளாண்மை பொருட்களையும் இனி வாங்கப்போவதில்லை என்று சீனா எடுத்துள்ள முடிவு, அமெரிக்காவிலுள்ள பண்ணையாளர்களுக்குப் பேரிடியாக விழுந்திருப்பதாக அந்நாட்டின் பண்ணை சம்மேளனத் தலைவர் ஜிப்பி டுவால் தெரிவித்துள்ளார்.

பண்ணையாளர்களிடையே திரு டிரம்ப்புக்கு ஆதரவு வலுவாக இருந்தபோதும் அடுத்த தேர்தலுக்குள் அவர்களது நிலைமையை முன்னேற்றுவதற்கான நெருக்குதலுக்கு அவர் ஆளாகியுள்ளார்.