பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் மகளும் எதிர்க்கட்சித் தலைவருமான மரியம் நவாசை பாகிஸ்தான் ஊழல் தடுப்பு அதிகாரிகள் இன்று கைது செய்தனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் மரியம் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் மரியம் மீது குற்றச்சாட்டு எதுவும் சுமத்தப்படாத நிலையில் அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்ற அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் பாகிஸ்தான் முன்னாள் நிதி அமைச்சர் இஸ்மாயில் போலிஸ் காவலில் வைக்கப்பட்ட மறுநாள் மரியம் நவாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது தந்தை நவாஸ் ஷரீபுக்கு ஊழல் குற்றச்சாட்டின் பேரில் 2018ஆம் ஆண்டு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் மகள் கைது
1 mins read
-

