அமெரிக்காவில் பத்து மாநிலங்களில் தமிழை அலுவல் மொழியாக அங்கீகாரம் செய்வதற்கு வலியுறுத்தி வருவதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்கம் மற்றும் தனியார் மகளிர் கல்லூரி இணைந்து அகராதியில் விழிப்புணர்வு கருத்தரங்கை சென்னை கிண்டியில் உள்ள தனியார் மகள் கல்லூரியில் நடத்தி வருகின்றன.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், அமெரிக்காவின் இரண்டு மாகாணங்களில் ஏற்கெனவே தமிழ் அலுவல் மொழியாக உள்ளதைச் சுட்டினார். மேலும் பத்து மாநிலங்களில் தமிழ்மொழியை அலுவல் மொழியாக அங்கீகாரம் செய்யக் கோரியுள்ளதாக அவர் சொன்னார்.

