ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தின் வருகையாளர் மண்டபத்தில் ஜனநாயக ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது நிலைப்பாட்டை விளக்கும் கையேடுகளை சுற்றுப்பயணிகளுக்கு விநியோகித்து வருகின்றனர். அத்துடன் அவர்கள் தங்களது உரிமைக்காகக் குரல்கொடுக்கும் அறிவிப்புப் பதாகைகளை ஏந்தியவாறு முழக்கமிட்டனர்.
"நீங்கள் எதிர்பார்த்திராத ஹாங்காங்கிற்காக எங்களை மன்னியுங்கள். நீங்கள் மனதில் நினைத்திருந்த நகருக்கு மாறாக உடைந்துபோன, சின்னாபின்னமான நகருக்குள் வந்துவிட்டீர்கள். ஆயினும், இந்த ஹாங்காங்கிற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம்," என்றன ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்தக் கையேடுகள்.
பிரிட்டனின் காலனித்துவக் கட்டுப்பாட்டி இருந்த ஹாங்காங் 1997ஆம் ஆண்டு சீனாவுக்கு ஒப்படைக்கப்பட்டது. தற்போது ஹாங்காங் ஆக மோசமான நெருக்கடியை எதிர்நோக்குகிறது.

