பாறைகளுக்கிடையில் சிக்கியவர் 4 நாட்களுக்குப் பிறகு மீட்பு

பாறைகளுக்கிடையில் சிக்கியவர் 4 நாட்களுக்குப் பிறகு மீட்பு

1 mins read

அங்கோர் வாட்: தவறவிட்ட கைவிளக்கை எடுக்க முற்பட்டபோது பாறைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட ஆடவர் நான்கு நாட்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளார்.

உரமாக பயன்படுத்தப்படும் குவானோ எனப்படும் வௌவால் எச்சங்களை எடுப்பதற்காக பட்டாம்பாங் என்ற பகுதிக்குச் சென்றிருந்த சும் போரா என்ற அந்த ஆடவர் கைவிளக்கைப் பாறைகளுக்கு இடையில் தவறிவிட்டுவிட்டார்.

அதனை எடுக்க முயன்றபோது அவர் சக்ராய் மலையின் குகை பாறை இடுக்கில் சிக்கிக்கொண்டார் 28 வயது சும் போரா.

வீடு திரும்பாத அவரைக் குடும்பத்தினர் தேடிய நிலையில், வழக்கமாக அவருடன் செல்லும் நண்பரால், கடந்த செவ்வாய்க் கிழமை கண்டுபிடிக்கப்பட்டார்.

உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்த போராவை 200 மீட்பு பணியாளர்கள், 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர்.

சில பாறைகளை உடைக்கப்பட்டு கடந்த புதன்கிழமை போரா மீட்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் போரா, "நான் உயிர் பிழைப்பேன் என்ற நம்பிக்கை இல்லை. என்னிடம் கத்தி இருந்திருந்தால், என் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பேன்.

நானும் என் நண்பனும் ஒல்லியானவர்கள். அதனால் என் நண்பன் இன்னோர் குகையின் இன்னோர் குறுகிய பாதை வழியாக என்னை அடைய முடிந்தது," என்றார் போரா.