சீனாவில் சூறாவளி: 18 பேர் பலி, பலர் வெளியேறினர்

சீனாவில் சூறாவளி: 18 பேர் பலி, பலர் வெளியேறினர்

1 mins read
0e4d6d34-a8dd-41fe-ba37-cb0288ac6282
சீனாவில் பெய்யும் கனமழையாலும் வீசும் பலத்த சூறாவளிக் காற்றினாலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ் -

பெய்ஜி்ங்: தைவானைத் தாக்கிய லெகிமா எனும் சூறாவளிக் காற்று நேற்று காலை சீனாவின் ஸிஜியாங் மாநிலத்தை கடுமையாகத் தாக்கியது. தொடர்ந்து பெய்த கனமழை, வீசிய பலத்த புயல் காற்று இவற்றின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்ததாகவும் இன்னும் 14 பேரைக் காணவில்லை என்றும் செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. சூறாவளியின்போது பல மின்கம்பங்கள் சாய்ந்ததாகவும் இதனால் பல வீடுகளில் மின் தடை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

வீசிய பலத்த சூறாவளிக் காற்றில் குறைந்தது 200 வீடுகள் சேதம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறின. சூறாவளிக் காற்று தற்போது ஷங்காய் நகரை நோக்கி வீசத் தொடங்கியிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியிலிருந்து 200,000 பேர் வெளியேறியிருப்பதாக அதிகாரிகள் கூறினர். கிட்டத்தட்ட 300 விமானங்களின் சேவைகளும் 1,2000 ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன,