வணிக வளாகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த இளைஞர் கைது

வணிக வளாகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த இளைஞர் கைது

1 mins read

வாஷிங்டன்: அமெரிக்காவின் மிஸ்சோரி மாநிலத்தில் உள்ள 'வால்மார்ட்' வணிக வளாகத்தினுள் கவச உடை அணிந்து துப்பாக்கியுடன் நுழைந்த இளைஞரை போலிசார் கைது செய்துள்ளனர். அந்த நபரிடமிருந்து போலிசார் துப்பாக்கி ஒன்றை பறிமுதல் செய்தனர். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் அதிகரித்திருக்கும் வேளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த வணிக வளாகத்தில் இருந்த மக்கள் அந்த நபரைப் பார்த்ததும் வணிக வளாக நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்.