சோதனையின்போது ரஷ்ய ராக்கெட் வெடித்ததில் ஐவர் பலி

சோதனையின்போது ரஷ்ய ராக்கெட் வெடித்ததில் ஐவர் பலி

1 mins read

மாஸ்கோ: ரஷ்யாவில் உள்ள ராணுவப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது எதிர்பாராத விதமாக ஒரு ராக்கெட் வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்ததாக ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ராக்கெட் வெடித்ததால் அப்பகுதியில் ஆபத்தான ரசாயனப் பொருள் எதுவும் காற்றில் கலக்கவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.