கிழக்குச் சீனாவில் புயலால் 28 பேர் மரணம்

கிழக்குச் சீனாவில் புயலால் 28 பேர் மரணம்

1 mins read
b91a973f-5e1b-414a-9ced-ef8ee97bf3c3
-

சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள கடற்கரையோர நகரங்களை 'லேகிமா' புயல் தாக்கியதில் 28 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 20 பேர் காணவில்லை என்றும் ஸேஜியாங் வானொலி ஒலிவழி தெரிவித்துள்ளது.

ஷாங்காய் மற்றும் ஸேஜியாங் மாநிலங்களில் புயலை முன்னிட்டு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்தப் புயலால் 3,000க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.

ஸேஜியாங்கிற்குள் நேற்று காலை நுழைந்த லேகிமா புயலின் தீவிரம் தணிந்திருப்பதாக சீனாவின் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.