பள்ளிவாசலில் சூப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்

பள்ளிவாசலில் சூப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்

1 mins read
55bfba59-b682-43ed-b3cd-892cdbfecd92
-

பல்வேறு ஆயுதங்களைத் தாங்கிய ஒரு துப்பாக்கிக்காரன், நார்வேயின் தலைநகர் ஒஸ்லோவுக்கு அருகிலுள்ள பள்ளிவாசலில் துப்பாக்கிச்சூடு நடத்தினான். கடந்த சனிக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தில் ஒருவர் இலேசாகக் காயமடைந்தார்.

பள்ளிவாசலுக்குச் சென்றிருந்த வயதானவர் ஒருவர் துப்பாக்கிக்காரனைக் கட்டுப்படுத்தியதைத் தொடர்ந்து அந்த இளம் ஆடவர் கைது செய்யப்பட்டார். நார்வே குடிமகனான அந்த துப்பாக்கிக்காரன் வெள்ளைக்காரர்கள் அல்லாத குடியேறிகளை எதிர்க்கும் இனவாதச் சித்தாந்ததைக் கொண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

அல்-நூர் இஸ்லாமிய நிலையத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் பிற்பகல் 4 மணி வாக்கில் போலிசாருக்குக் கிடைத்தது. துப்பாக்கியால் சுடப்பட்ட ஒருவருக்கு இலேசாகக் காயம்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.

தாக்குதல் நடந்த புறநகர்ப் பகுதியிலிலுள்ள ஒரு வீட்டில் , கைது செய்யப்பட்ட அந்தச் சந்தேக நபருடன் தொடர்புடைய ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக போலிசார் தாக்குதல் நடந்த அதே நாளில் கூறினர்.