அனுமதி பெறாத ஆர்ப்பாட்டம்; கண்ணீர் புகை குண்டு வீச்சு

அனுமதி பெறாத ஆர்ப்பாட்டம்; கண்ணீர் புகை குண்டு வீச்சு

1 mins read
8189e8b5-f280-495d-8def-f7b7828d3626
அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதால் போலிசார் கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்தினர். படம்: ராய்ட்டர்ஸ் -

ஹாங்காங்: அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களால், நேற்று போலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

எனவே ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க நேற்றும் போலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

உழைக்கும் வர்க்கத்தினர் பகுதி என்று கூறப்படும் சாம் சுய் போ, காவல் நிலையத்திற்கு வெளியே என நான்கு இடங்களில் கண்ணீர் புகை குண்டு பயன்படுத்தப்பட்டது.

இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து ஓடியதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

கண்ணீர் புகை குண்டுகளுக்கு சிலர் கலைந்துசென்றாலும் சிறிது நேரம் கழித்து அவர்கள் மீண்டும் காவல்நிலையத்திற்கு வெளியே ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.

ஒருசிலர் தடுப்புகளால் சாலைகளை மறித்தனர். கடைத்தொகுதி ஒன்றுக்கு அருகில் கூடியிருந்த சிலர், போலிசார் மீது கற்களை வீசினர். விக்டோரியா பார்க்கில் பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், மற்ற இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் விக்டோரியா பார்க் பகுதியில் பேரணியில் கலந்துகொண்ட பிறகு பெரும்பாலானவர்கள் அனுமதி பெறாத ஆர்ப்பாட்டங்களிலும் கலந்துகொண்டதால் போலிசார் கண்ணீர் புகைகுண்டுகளைப் பயன்படுத்தினர்.