ஒஸ்லோ: நார்வே நாட்டின் பள்ளிவாசல் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் புறநகர் பகுதியில் உள்ள அல்-நூர் இஸ்லாமிக் பள்ளிவாசலில் நேற்று முன்தினம் சிலர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மசூதியின் வாசல் வழியாக ஆயுதங்களுடன் நுழைந்த இளைஞர் ஒருவர், கண்மூடித்தனமாக அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினார்.
இதில் 75 முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார். தகவல் அறிந்து அங்குச் சென்ற போலிசார், பொதுமக்கள் பிடியில் இருந்த அந்த இளைஞரைக் கைது செய்தனர். அவரது இருப்பிடம் அறிந்து சென்றபோது இளைஞரின் உறவுக்கார பெண் ஒருவர் அங்கு இறந்து கிடந்தார்.
இதனால் இளைஞர் அந்த கொலையைச் செய்திருக்கலாம் என சந்தேகமடைந்துள்ள போலிசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலக முழுவதும் ஹஜ்ஜுப் பெருநாள் ஏற்பாடுகள் களைகட்டியுள்ள நிலையில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்துள்ளது.

