ஹாங்காங்கில் அனைத்து விமானச் சேவைகளும் ரத்து

ஹாங்காங்: ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் ஒன்று திரண்டதை அடுத்து அனைத்து விமானச் சேவைகளையும் நேற்று ரத்து செய்ய விமான நிலைய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

விமானச் சேவைகள் மீண்டும் இன்று தொடங்குமா என்பது தெரியவில்லை.

ஹாங்காங் விமான நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடியதால் விமான நிலைய நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டனர்.

இதனால், ஏற்கெனவே ஹாங்கிற்கு புறப்பட்ட விமானங்கள் மற்றும் ஹாங்காங்கில் வந்திறங்கக் கூடிய விமானங்கள் இவற்றைத் தவிர மற்ற விமானச் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் அறிவித்தனர்.

விமானப் பயண நிலவரம் குறித்து விமான நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளுமாறு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பயணிகளுக்கு ஆலோசனை கூறியுள்ளது.

இதற்கிடையே ஹாங்காங்கில் போலிசாரைத் தாக்க ஆபத்தான கருவிகளைப் பயன்படுத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்களை சீனா கடுமையாகச் சாடியுள்ளது. ஹாங்காங்கில் பயங்கரவாதம் உருவாவதற்கான முதல் அறிகுறி இது என்று சீனா எச்சரித்திருப்பதாக ஹாங்காங் வெளியுறவு அலுவலகம் தெரிவி்த்தது.

ஹாங்காங்கில் வார இறுதி நாட்களில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்ட நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் விமான நிலையத்தில் நேற்று திரண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டம் தீவிரம் அடைந்தபோது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலிசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி அவர்களை கலைக்க முயன்றனர். பதிலுக்கு போலிசார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்கியதாக போலிஸ் வட்டாரங்கள் கூறின.

விமான நிலையத்தில் நேற்று ஒன்றுதிரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பாலானோர் இளையர்கள் என்று கூறப்பட்டது.

அவர்கள் கறுப்பு நிற உடைகளை உடுத்தியிருந்தனர். அத்துடன் அவர்கள் போலிசாரிடமிருந்து தங்களை பாதுகாத்துகொள்ள முகமூடி அணிந்திருந்தனர். வார இறுதி ஆர்ப்பாட்டத்தின்போது அவர்களைக் கலைக்க போலிசார் பயன்படுத்திய துப்பாக்கி தோட்டாக்களில்் ஒன்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒரு மாதின் கண்ணில்பட்டு அவர் கடுமையாக் காயம் அடைந்தார்.

அதனால் இந்த முறை அத்தகைய பாதிப்பு எதுவும் நேராமல் இருக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் துணியால் தங்கள் கண்களை மறைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக ஆர்ப்பாட்டத் தரப்பினர் கூறினர். வார இறுதி ஆர்ப்பாட்டத்தின்போது 40 பேர் காயம் அடைந்ததாக மருத்துவமனைத் தகவல்கள் கூறின. ஆர்ப்பாட்டத்தின்போது காயமடைந்த அந்த மாது கண் பார்வையை இழக்கக்கூடும் என்று அஞ்சப்படுவதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்ததாக நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆர்ப்பாட்டங்களை நிறுத்தும்படி போலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!