ஒன்பது நாட்களாக சிறுமியைத் தேடும் பணி தொடர்கிறது

ஒன்பது நாட்களாக சிறுமியைத் தேடும் பணி தொடர்கிறது

1 mins read

சிரம்பான்: மலேசியாவில் காணாமற்போன 15 வயது பிரிட்டிஷ் சிறுமியைத் தேடும் பணி கடந்த 9 நாட்களாக நீடிக்கிறது என்று மலேசியப் போலிசார் தெரிவித்துள்ளனர். சிரம்பானில் உள்ள டூசுன் உல்லாச விடுதியில் தன் பெற்றோருடன் தங்கியிருந்த பிரிட்டிஷ் சிறுமி நோரா அன் குய்ரினை கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதியிலிருந்து காணவில்லை.

தங்கள் மகளைக் காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து போலிசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தற்போது 348 பேர் சிறுமியைத் தேடிக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டுள்ளனர். போலிஸ் படையைச் சேர்ந்தவர்களும் தீயணைப்புப் படை வீரர்களும், மீட்புக் குழுவினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் தொண்டூழியர்களும் சேர்ந்து சிறுமியைத் தேடி வருகின்றனர். அருகில் உள்ள காடுகளிலும் கிராமங்களிலும் அவர்கள் தேடி வருகின்றனர். மோசமான பருவநிலையையும் பொருட்படுத்தாது மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அச்சிறுமி கடத்தப்படவில்லை என்று தாங்கள் நம்புவதாக போலிசார் கூறியுள்ளனர்.