இந்தோனீசியாவில் தீப்பற்றி எரியும் 899 இடங்கள்

ஜகார்த்தா: கடந்த ஒரு மாதத்தில் ஆசியான் நாடுகளில் தீப்பற்றி எரியும் மொத்தம் 1,128  இடங்களில் 80 விழுக்காடு பகுதிகள் இந்தோனீசியாவில் உள்ளன என்று ஆசியான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இந்தோனீசியாவில் மட்டும் 899 பகுதிகளில் தீப்பற்றி எரிவதாக ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. கலிமந்தானில் 531 இடங்கள், சுமத்ராவில் 303 இடங்கள், ஜாவாவில் 36 இடங்கள் மற்றும் சுலவேசியில் 29 இடங்கள் அதிகம் தீப்பற்றி எரியும் இடங்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மலேசியாவில் 71 பகுதிகள் தீப்பற்றி எரியும் இடங்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மியன்மாரில் 7 இடங்களில் தீப்பற்றி எரிவது கண்டறியப்பட்டுள்ளது.