தாய்லாந்தில் கூட்டணி அரசாங்கத்திற்கு சிக்கல்

தாய்லாந்தில் கூட்டணி அரசாங்கத்திற்கு சிக்கல்

1 mins read

பேங்காங்: தாய்லாந்தின் கூட்டணி அரசாங்கத்திலிருந்து ஒரு கட்சி விலகியதைத் தொடர்ந்து கூட்டணி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரதமர் பிரயுத் சான் ஓ சா தலைமையிலான கூட்டணி அரசாங்கத்திலிருந்து கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றாக விலகிக் கொண்டால் வரும் மாதங்களில் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட அறிக்கையை நிறைவேற்றுவதில் கூட்டணி அரசு பெரும் சிக்கலை எதிர்நோக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மங்கோல்கிட் தானும் தமது கட்சியும் கூட்டணி அரசாங்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். அரசாங்கத்தின் சில கொள்கைகள் தனக்கு திருப்தியளிக்காத காரணத்தால் கூட்டணியிலிருந்து தமது கட்சி விலகுவதாக அவர் கூறினார். திரு பிரயுத் பிரதமர் பதவியில் நீடிக்கும் வரை கூட்டணி அரசாங்கத்தில் தமது கட்சி இடம்பெறாது என்று அவர் அறிவித்தார்.