பெய்ஜிங்: சீனாவின் ஸிஜியாங் மாநிலத்தை கடந்த சனிக்கிழமை லெகிமா புயல் தாக்கியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் கூறினர். புயல் காற்று மணிக்கு 190 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதுடன், பலத்த மழையும் பெய்தது. கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடல் அலைகள் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இந்தப் புயலால் ஏராளமான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன. அதன்பின்னர் ஷாங்டாங், அன்ஹூய் ஆகிய மாநிலங்களையும் லெகிமா புயல் தாக்கியது.
கடுமையான புயல் மற்றும் கனமழையால்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சனிக்கிழமையன்று புயலில் சிக்கி இறந்த 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. புயலால் பெரும் சேதம் ஏற்பட்டதாக பேரிடர் நிவாரண அமைப்பு அதிகாரிகள் கூறினர்.

