பிலிப்பீன்சில் போராளிகள் தாக்கியதில் மூவர் பலி

பிலிப்பீன்சில் போராளிகள் தாக்கியதில் மூவர் பலி

1 mins read

மணிலா: பிலிப்பீன்சில் சயாஃப் குழுவைச் சேர்ந்த போராளிகள் நடத்திய தாக்குதலில் இரு ராணுவ வீரர்களும் ஒரு சிறுமியும் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

மணிலாவிலிருந்து 1,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டலிபாவ் நகரில் ராணுவ வீரர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது அவர்கள் மீது அபு சயாஃப் போராளிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். போராளிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

அந்த துப்பாக்கிச்சூட்டில் இரு சிறுமிகள் காயம் அடைந்ததாகவும் மாநில உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

காயம் அடைந்த இரு சிறுமிகளில் ஒரு சிறுமி மருத்துவமனையில் இறந்ததாகவும் அவர் சொன்னார்.

பிலிப்பீன்சில் அபு சயாஃப் குழுவைச் சேர்ந்த போராளிகள் ஆட் கடத்தல், குறிப்பாக வெளிநாட்டினரைக் கடத்திச் சென்று மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்கு நடந்த மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் அபு சயாஃப் குழுவினரே காரணம் என்று அரசாங்கம் கூறி வருகிறது.