தோக்கியோ: ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் குரோசா என்ற புயல் உருவாகியுள்ளது. அப்புயல் இன்று கரையை கடக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது 100 கி.மீ வேகத்தில் கனமழையுடன் கூடிய பயங்கர காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தோக்கியோ, நகோயா மற்றும் ஒசாகா ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சாலை போக்குவரத்தும் தடைப்பட்டது. இந்நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக 222 விமானங்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் விமானப் பயணிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். ரயில் சேவை நிறுத்தப்பட்டதாலும் பலர் பாதிக்கப்பட்டனர்.
ஜப்பானில் புயல்: விமான, ரயில் சேவைகள் ரத்து
1 mins read

