துப்பாக்கிச்்சூட்டு சம்பவங்களை ஆதரித்த இளைஞர் கைது

வாஷிங்டன்: துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை ஆதரித்து இணையத்தில் கருத்து தெரிவித்துவந்த இளைஞர் ஒருவரை அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள  ஜஸ்டின் ஒல்சன் என்ற 18 வயது இளைஞர் ஒஹையோ மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று அதிகாரிகள் கூறினர். 

சட்ட அமுலாக்க அதிகாரி ஒருவரை தாக்கப்போவதாக அவர் இணையப் பக்கத்தில் மிரட்டல் விடுத்தது தொடர்பில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறினர். அந்த இளைஞர் ஏற்கெனவே துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை ஆதரித்து இணையத்தில் கருத்து தெரிவித்திருந்ததாக புலனாய்வுத் துறை அதிகாரிகள் கூறினர். அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது தந்தை வீட்டை அதிகாரிகள் சோதனை செய்தபோது 25 துப்பாக்கிகளும் 1,000 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இணையப்பக்கத்தில் கருத்து தெரிவித்ததை ஒப்புக்கொண்ட அந்த இளைஞர் நகைச்சுவைக்காக அவ்வாறு கருத்து தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உலக அளவில் இத்தகைய மூன்றாவது அறுவை சிகிச்சை இது. படம்: அன்ஸ்பிளாஷ்

07 Dec 2019

ஒரே மாதிரி இரட்டையர்களுக்கிடையே விந்தக மாற்று அறுவை சிகிச்சை

சிறுவனுக்கும் அவனைத் தூக்கி எறிந்த பதினெட்டு வயது இளையரான ஜோன்டி பிரேவரிக்கும் (படம்) இடையே எந்தத் தொடர்பும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று போலிசார் கருதுகின்றனர். படம்: ஏஎஃப்பி

07 Dec 2019

‘சுய விளம்பரத்துக்காக’ 6 வயது சிறுவனை பத்தாவது மாடியிலிருந்து தூக்கி வீசிய இளையர்

ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் போலிசாரை நோக்கி சைக்கிளை வீசுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்

07 Dec 2019

பிரான்சில் வேலை நிறுத்தப் போராட்டம்: போலிஸ் தடியடி