துப்பாக்கியை கட்டுப்படுத்த  துரித நடவடிக்கை தேவை 

வாஷிங்டன்: அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தேவை என்று அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினர் செனட் சபையில் வலியுறுத்தியுள்ளனர். துப்பாக்கிகள் பயங்கரவாதிகளின் கைகளில் கிடைக்காமல் இருக்க துப்பாக்கி வைத்திருப்பவர்களின் பின்னணி பற்றி அறிய துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அமெரிக்க- மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கு செலவு செய்யப்படும் பணத்தை அமெரிக்காவில் பயங்கரவாதத்தை  ஒழிக்க பயன்படுத்தலாம் என்றும் ஜனநாயகக் கட்சியினர்  யோசனை தெரிவித்துள்ளனர். எல்லைச் சுவர் எழுப்ப 5 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி தற்போது  தேவைப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் கேட்டுக்கொண்டிருந்த நிலையில் அந்த கோரிக்கையை கைவிடுமாறு டிரம்ப் நிர்வாகத்தை கேட்டுக்கொள்ளவிருப்பதாக செனட் ஜனநாயகக் கட்சித் தலைவர் சுக் ஸ்குமர் கூறியுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்த நான்கு வார பிரசார காலத்தின் பெரும் பகுதியில் கருத்துகணிப்புகள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியே தொழிற் கட்சியைவிட கிட்டத்தட்ட 10 புள்ளிகள் அதிகமாக பொதுமக்கள் ஆதரவைப் பெற்று முன்னணி வகித்து வந்ததாக கூறிவந்துள்ளன. படம்: ஏஎஃப்பி

11 Dec 2019

பிரிட்டன் கருத்துக்கணிப்பு: குறுகிய பெரும்பான்மையில் வெற்றி

சுவீடன் நாட்டுத் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற நோபெல் பரிசு வழங்கும் விழாவில் பொருளாதாரத்திற்கான நோபெல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி இந்திய பாரம்பரிய உடையணிந்து விருதைப் பெற்றுக்கொண்டார்.  படம், காணொளி: ஊடகம் / டுவிட்டர்

11 Dec 2019

வேட்டி, சேலையில் சென்று நோபெல் பரிசு பெற்ற அபிஜித் - எஸ்தர் தம்பதி

அவசர மருத்துவ உதவியாளர் ஒருவரை அணைத்து நன்றி கூறும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டன். படம்: ஏஎஃப்பி

11 Dec 2019

நியூசிலாந்து எரிமலை வெடிப்பு: குற்றவியல் விசாரணை தொடங்கியது