பிரான்சில் திடீரென்று ஏற்பட்ட மிகப் பெரிய பள்ளம்

பிரான்சின் அமைன்ஸ் நகரில் ஒரு விடுதிக்கு வெளியில் திடீரென்று மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டது.  5 மீட்டர் ஆழம், 10 மீட்டர் அகலம்  கொண்ட பள்ளம் அப்பகுதியில் திடீரென்று ஏற்பட்டதைப் பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்ததாக அதிகாரிகள் கூறினர். அப்பகுதியில் எரிவாயு மற்றும் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. பள்ளம் ஏற்பட்டபோது அவ்விடத்தில் யாரும் இல்லாததால் பாதிப்பு எதுவும் இல்லை என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவ்விடத்தில் பூமிக்கு அடியில் இருந்த ஒரு குகை ஒன்று இடிந்து விழுந்ததால் அவ்வளவு பெரிய பள்ளம்  ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

படம்: ஏஎஃப்பி