14 வயது சிறுமியிடம் பாலியல் சேவை பெற்ற ஆடவர் கைது

இந்தோனீசியாவின் பிரீகி கடற்கரையில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்த 14 வயது சிறுமியிடம் பாலியல் சேவை பெற்ற குற்றத்திற்காக சுவாஜி என்ற 48 வயது மீனவர் கிழக்கு ஜாவாவின் துலுங்காகுங்'கின் போலிசாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

மனிதக் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அந்த உணவகத்தின் முதலாளியான 35 வயது மாது கைது செய்யப்பட்டதை அடுத்து சிறுமியிடம் பாலியல் சேவை பெற்றதற்காக அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

தாம் பணிபுரிந்துகொண்டிருந்த அந்த உணவகத்தில் வேலை வாய்ப்புகள் உள்ளதென அச்சிறுமி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட பிறகு இவ்வழக்கு அம்பலமானது.

வேலை வாய்ப்புகள் கேட்டு வந்த சில விண்ணப்பங்களிலிருந்து அந்த உணவக நிர்வாகம் 16 மற்றும் 15 வயதுடைய இரு சிறுமிகளை வேலைக்குச் சேர்த்தது.

உணவகத்தில் பணிபுரிந்த மூன்று சிறுமிகளும் தங்களது 30 வயது ஆண் நிர்வாகியுடன் பிரிகி கடற்கரைக்குச் சென்றது கண்டிப்பிடிக்கப்பட்டது.

மூன்று மாதங்களாக அந்த உணவகத்தில் பணிபுரிந்த 14 வயது சிறுமி ஒரு நாளைக்கு 10 ஆண்களுக்கு குழந்தை பாலியல் தொழில் சேவைகளை அளிக்கவேண்டியதிருந்ததாக துலுங்காகுங் போலிஸின் பிரதிநிதி திரு பிரிக்.ஏண்டுரோ பர்னோமோ கூறினார்.

இச்சேவையினால் மிகுந்த களைப்பிற்குள்ளான அச்சிறுமி தமக்கு உதவ தமது தோழிகளையும் அந்த உணவகத்தில் வேலைக்கு வைக்குமாறு பரிந்துரைத்ததாக தெரிய வந்தது.

200,000 இந்தோனேசிய ரூப்பியாவுக்கு ($19.40) அந்தச் சிறுமியை பாலியல் சேவைக்குக் கட்டணம் நிர்ணயித்த உணவகத்திந் முதலாளி அதிலிருந்து  50, 000 ரூப்பியாவை 'கமி‌‌ஷனாகப்' பெற்றுக்கொண்டார்.

அந்த உணவகத்தில் பணிபுரிந்த மூன்று சிறுமிகளும் தற்போது துலுங்காகுங் சமூக அமைப்பின் பாதுகாப்பில் உள்ளனர்.