ஹாங்காங் குறித்து சீனாவுடன் பேச டிரம்ப் விருப்பம்

வாஷிங்டன்: ஹாங்காங்கில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கும் வேளையில் ஹாங்காங் பிரச்சினை குறித்து சீன அதிபர் ஸி ஜின்பிங்கை சந்தித்துப் பேச விரும்புவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான அடிப்படையில் ஹாங்காங் பிரச்சினைக்கு திரு ஸியால் தீர்வு காண முடியும் என்பதில் தமக்கு சிறிதுகூட சந்தேகம் இல்லை என்று டிரம்ப் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அமெரிக்காவுடன் வர்த்தக உடன்பாடு காண்பதற்கு முன்னதாக ஹாங்காங் பிரச்சினையை மனிதாபிமான முறையில் சீனா கையாள வேண்டும் என்று திரு டிரம்ப் கேட்டுக்கொண்டார்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கைத்தொலைபேசி, மடிக்கணினி போன்ற சில பொருட்களுக்கு அமெரிக்கா அறிவித்திருந்த கூடுதல் வரி விதிப்பு டிசம்பர் மாதம் வரை தள்ளிவைக்கப்பட்டிருப்பது அமெரிக்காவைக் காட்டிலும் சீனாவுக்கே உதவியாக இருக்கும் என்றும் திரு டிரம்ப் கூறினார்.

முன்னதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் ஹாங்காங் நிலவரம் கவலை அளிப்பதாகத் தெரிவித்தார்.

சீனாவின் ராணுவ வாகனங்கள் ஹாங்காங் எல்லையை நோக்கிச் செல்வதாக வெளிவந்த தகவல்கள் குறித்து அமெரிக்கா மிகுந்த கவலை கொள்வதாக அமைச்சுப் பேச்சாளர் கூறியதாக ஏஎஃப்பி தகவல்கள் கூறின.

ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சீனாவுக்கு அனுப்பி விசாரிக்க வகை செய்யும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் பல வாரங்களாக ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கின்றன. சீனாவின் முழு கட்டுப்பாட்டுக்கள் ஹாங்காங் வருவதற்கு அந்த மசோதா வழி வகுக்கும் என்று மசோதாவை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். அந்த மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மைய நாட்களில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் அதிககரித்துள்ளது.

ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தால் ஹாங்காங் மோசமான நிலைக்குத் செல்ல நேரிடும் என்று ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் எச்சரித்துள்ளார். இந்நிலையில் ஹாங்காங் எல்லையை ஒட்டிய ஒரு நகரில் ஆயிரக்கணக்கான சீன ராணுவ அதிகாரிகள் கொடிகளை அசைத்தபடி அணிவகுத்துச் சென்றதைப் பார்த்ததாக ஏஎப்பி நிருபர் ஒருவர் கூறியுள்ளார். சென்சென் நகரில் உள்ள விளையாட்டரங்கில் சீன ராணுவத்தின் கவச வாகனங்களும் காணப்பட்டதாக அந்த நிருபர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!