ஜப்பானில் வீசும் பலத்த புயல் காற்று; நிலச்சரிவுகள் ஏற்படும் ஆபத்து

தோக்கியோ:  ஜப்பானின் மேற்குப் பகுதியில் பலத்த புயல்காற்று வீசுவதுடன் கனமழையும் தொடர்ந்து பெய்து வருவதால் நேற்றும் விமான, ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். குரோசா எனும் புயல் நேற்று காலை ஷிகோகு மற்றும் கூசுத் தீவுகளை நோக்கி வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரவித்தது.

இந்த புயல் காற்றினால் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்றும் ஆறுகளில் நீர் நிரம்பி ஆற்றுநீர் பெருக்கெடுத்து ஓடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். கடல் அலைகளின் சீற்றம் அதிகரித்திருப்பதால் படகுச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 600 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு கருதி 550,000 பேரை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.புயல் காற்றில் சிக்கி நான்கு பேர் காயம் அடைந்ததாகவும் ஆற்றோரத்தில் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறுவர்கள் 18 பேர் ஆற்றுநீர் பெருக்கெடுத்து ஓடியதால் தவிக்க நேர்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்தின் தலைவரான இவர் தொழில் நிமித்தமாக இந்தியாவுக்குச் சென்றுள்ளார். படம்: இணையம்

13 Dec 2019

இங்கிலாந்து தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன்: எனது மரபணு தமிழகத்துடன் தொடர்புடையது

உறைகளை பிரித்து பார்த்த ஊழியர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த உறைகளில் கிறிஸ்துமஸ் போனஸ் தொகை கொடுக்கப்பட்டிருந்தது. படம்: ஊடகம்

13 Dec 2019

ஊழியர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் போனஸ் அளித்த நிறுவனம்

பிரிட்டிஷ் பொதுத் தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. படம்: ஏஎஃப்பி

13 Dec 2019

போரிஸ் ஜான்சன் கட்சி வெற்றி