பிலடெல்பியாவில் போலிசார் மீது துப்பாக்கிச்சூடு: 6 பேர் காயம் 

வாஷிங்டன்: அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் போலிசார் மீது துப்பாக்கிக்காரன் ஒருவன் கண்மூடித்தனமாக சுட்டதில் போலிஸ்காரர்களில் 6 பேர் காயம் அடைந்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர். போதைப்பொருள் குற்றச்சாட்டின்பேரில் ஒருவரை விசாரிக்க அவருக்கு  அழைப்பாணை கொடுப்பதற்காக போலிசார் பிலடெல்பியாவில் உள்ள ஒரு வீட்டுக்குச் சென்றபோது அவர்கள் மீது துப்பாக்கிக்காரன் சரமாரியாக சுட்டதாக போலிஸ் கமிஷனர் ரிச்சர்ட் ரோஸ் கூறினார். அந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து போலிசார் அந்த வீட்டை சுற்றிவளைத்து துப்பாக்கிக்சூடு நடத்தியதாக உயர் அதிகாரி ரிச்சர்ட் கூறினார். அந்த துப்பாக்கிக்காரன் பின்னர் போலிசாரிடம் சரண் அடைந்ததாகவும் அந்த வீட்டினுள் சிக்கியிருந்த இரு போலிஸ்காரர்களும் மேலும் இருவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகவும் திரு ரிச்சர்ட் கூறினார்.