பிரிட்டிஷ் சிறுமி நோரா பட்டினியால் மரணம்

கோலாலம்பூர்: பிரிட்டிஷ் சிறுமி நோரா குய்ரின் பட்டனியால் இறந்ததாக பிரேதப் பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது என்று மலேசியப் போலிசார் தெரிவித்துள்ளனர்.

மலேசியாவில் பத்து நாட்களாத் தேடப்பட்டு வந்த 15 வயது பிரிட்டிஷ் சிறுமி நோராவின் சடலத்தை மீட்புக் குழுவினர் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு காட்டுப் பகுதியில் கண்டுபிடித்தனர்.

நிர்வாணமாக காணப்பட்ட சிறுமியின் சடலத்தை கிட்டத்தட்ட 9 மணி நேரம் பரிசோதனை செய்த பிரேதப் பரிசோதனை நிபுணர்கள்  நேற்று அறிக்கை வெளியிட்டனர்.

பல நாட்கள் பட்டினியால் வாடியதால் சிறுமியின் குடலில்  ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக அச்சிறுமி இறந்ததாக பிரேதப் பரிசோதனை முடிவில் தெரியவந்ததாக மாநில போலிஸ் படைத் தலைவர் முகம்மது மாட் யூசோப் கூறினார்.

நோரா கடத்தப்பட்டதற்கான அடையாளம் எதுவும் அவரது உடலில் காணவில்லை என்றும்  அச்சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் பிரேதப் பரிசோதனை முடிவு  காட்டுவதாக முகம்மது யூசோப்  கூறினார். 

நோராவின் சடலம் கண்டுபிடிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் அச்சிறுமி இறந்திருக்க வேண்டும் என்று பிரேதப் பரிசோதனை நிபுணர்கள் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். சுற்றுலாப் பயணமாக தன் பெற்றோருடன் இம்மாதத் தொடக்கத்தில் மலேசியா  வந்திருந்த சிறுமி நோரா சிரம்பானில் உள்ள டூசுன் உல்லாச விடுதியில் தங்கிருந்தபோது திடீரென்று காணாமல் போனார்.

தங்கள் மகளைக் காணவில்லை என்று நோராவின் பெற்றோர் போலிசாரிடம் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து சிறுமியைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினரும் தொண்டூழியர்களும் ஈடுபட்டிருந்தனர். 

தேடப்பட்ட பத்தாவது நாளில் சிறுமி நோராவின் சடலத்தை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர். 

பிரேதப் பரிசோதனை முடிவு  நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் பிரிட்டிஷ் சிறுமியின் மரணம் குறித்து பிரான்ஸ் கிரிமினல் விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று பிரெஞ்சு அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உலக அளவில் இத்தகைய மூன்றாவது அறுவை சிகிச்சை இது. படம்: அன்ஸ்பிளாஷ்

07 Dec 2019

ஒரே மாதிரி இரட்டையர்களுக்கிடையே விந்தக மாற்று அறுவை சிகிச்சை

சிறுவனுக்கும் அவனைத் தூக்கி எறிந்த பதினெட்டு வயது இளையரான ஜோன்டி பிரேவரிக்கும் (படம்) இடையே எந்தத் தொடர்பும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று போலிசார் கருதுகின்றனர். படம்: ஏஎஃப்பி

07 Dec 2019

‘சுய விளம்பரத்துக்காக’ 6 வயது சிறுவனை பத்தாவது மாடியிலிருந்து தூக்கி வீசிய இளையர்

ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் போலிசாரை நோக்கி சைக்கிளை வீசுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்

07 Dec 2019

பிரான்சில் வேலை நிறுத்தப் போராட்டம்: போலிஸ் தடியடி