அனைத்துலக ஆரோக்கிய உச்சநிலை மாநாடு ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூருக்கு மாற்றம்

ஆரோக்கியத் துறையை மையமாகக் கொண்ட ஓர் அனைத்துலக கூட்டத்தின் அமைப்பாளர்கள், முதலில் ஹாங்காங்கில் திட்டமிடப்பட்டிருந்த கூட்டத்தை சிங்கப்பூருக்கு மாற்றுகின்றனர்.

சுமார் 4.2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் ($5.83 ட்ரில்லியன்) மதிப்பிலான உலகளாவிய ஆரோக்கிய பொருளாதாரத்தைச் சேர்ந்த சர்வதேச தலைவர்களின் முன்னணி கூட்டமாக அமைப்பாளர்களால் கூறப்படும் இந்த உலகளாவிய ஆரோக்கிய உச்சநிலை மாநாட்டின் (குளோபல் வெல்னஸ் சம்மிட்) இடமாற்றம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

அக்டோபர் மாதம் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இம்மாநாடு, இப்போது சிங்கப்பூரில் உள்ள கிராண்ட் ஹயட் ஹோட்டலில் நடைபெறும்.

இந்த மாற்றத்திற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை என்றாலும், ஹாங்காங்கில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் 10வது வாரத்திற்குள் நுழைந்ததால், இந்த அறிவிப்பு வந்தது என்று நம்பப்படுகிறது.

இந்த ஆர்ப்பாட்டங்கள் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் நடவடிக்கைகளை முடக்கியுள்ளன. அதனால் பயணிகளுக்கு நீண்ட கால தாமதம் ஏற்பட்டதோடு, இந்த வாரம் 1,000 விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உலக அளவில் இத்தகைய மூன்றாவது அறுவை சிகிச்சை இது. படம்: அன்ஸ்பிளாஷ்

07 Dec 2019

ஒரே மாதிரி இரட்டையர்களுக்கிடையே விந்தக மாற்று அறுவை சிகிச்சை

சிறுவனுக்கும் அவனைத் தூக்கி எறிந்த பதினெட்டு வயது இளையரான ஜோன்டி பிரேவரிக்கும் (படம்) இடையே எந்தத் தொடர்பும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று போலிசார் கருதுகின்றனர். படம்: ஏஎஃப்பி

07 Dec 2019

‘சுய விளம்பரத்துக்காக’ 6 வயது சிறுவனை பத்தாவது மாடியிலிருந்து தூக்கி வீசிய இளையர்

ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் போலிசாரை நோக்கி சைக்கிளை வீசுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்

07 Dec 2019

பிரான்சில் வேலை நிறுத்தப் போராட்டம்: போலிஸ் தடியடி