நல்லிணக்கத்தைப் பேண ஸாகிர் வெளியேற்றப்படவேண்டும்: மலேசிய தலைவர்கள்

சமய போதகர் ஸாகிர் நாயக்கின் இனவாதப் பேச்சை எதிர்க்கவேண்டும் என மலேசியாவின் ஆளும் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் குரல் எழுப்பியுள்ளனர். 

வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையைக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர். 

தேசிய நலனுக்காக இதுபோன்ற பேச்சுகளைப் பொருட்படுத்த வேண்டாமென பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் உள்ளிட்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 

நாடு மேம்பாடு அடைவதற்குத் தேவையான அம்சங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள அவர்கள், மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சுத்தமான நாட்டையும் சமூகத்தையும் உருவாக்கவேண்டும் என்று வலியுறுத்தினர். 

ஆகவே நாட்டின் அமைதிக்காகவும் நல்லிணக்கத்தை நிலைநாட்டவும் பிரதமர் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.