மகாதீர்: போலிஸ் விசாரணைக்குப் பிறகு ஸாகிரின் நிரந்தரவாசத் தகுதி பற்றி முடிவெடுக்கப்படும்

சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகிர் நாயக் மீதான போலிஸ் விசாரணை அறிக்கை வெளியான பிறகு அவரது நிரந்தரவாசத் தகுதி பற்றி முடிவெடுக்கப்படும் என மலேசிய பிரதமர் மகாதீர் முகமது கூறியுள்ளார்.

நாட்டின் நன்மைக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய செயல்களை திரு ஸாகிர் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அவரது நிரந்தரவாசத் தகுதி மீட்டுக்கொள்ளப்படும் என்று நேற்று டாக்டர் மகாதீர் கூறினார்.

ஸாகிரின் செயல்பாடுகளைப் பற்றி தற்போது மலேசிய போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வெவ்வேறு இனத்தவரிடையே சச்சரவுகளைத் தூண்டும் விதத்தில் ஸாகிர் பேசுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பிரதமர்.

‘பழைய விருந்தாளிகள்’ தங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லுமாறு மலேசிய சீனர்களை ஸாகிர் குறிப்பிட்டதற்காக அவரை மன்னிப்புக்கோருமாறு அரசாங்கம் கேட்குமா என்ற செய்தியாளர் கேள்விக்கு, அதுமட்டுமே மக்களின் கோபத்தைத் தணித்துவிடாது என்றார் திரு மகாதீர்.

கடந்த வாரம் கோத்தா பாருவில் உரையாற்றியபோது ஸாகிர் பேசிய இனவாதக் கருத்துகளின் தொடர்பில் 115 பொதுப் புகார்கள் பெறப்பட்டதையடுத்து, அமைதியைக் குலைக்கும் நோக்கில் வேண்டுமென்றே அவமானப்படுத்தியதாக ஸாகிர் மீது குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 504ன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த உரையில், இந்திய அரசாங்கத்துக்கு மிகவும் உண்மையுள்ளவர்களாக மலேசிய இந்தியர்கள் இருப்பதாக ஸாகிர் கூறியிருந்தார்.

மலேசியாவின் நல்லிணக்கம், பொது ஒழுங்கு ஆகியவற்றைக் குலைப்போர் மலேசிய குடிமக்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மலேசிய உள்துறை அமைச்சர் முஹைதின் யாசின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்தியாவின் மும்பையில் பிறந்த ஸாகிருக்கு 2015ஆம் ஆண்டில் மலேசியாவில் நிரந்தரவாசத் தகுதி வழங்கப்பட்டது.

இதற்கிடையே, தம்மீது அவதூறு பரப்பியதாக மலேசிய மனிதவள அமைச்சர் எம். குலசேகரன், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சான்டியாகோ, பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி. ராமசாமி, பாகன் டாலம் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் முனியாண்டி, முன்னாள் தூதர் டென்னிஸ்

ஜெ. இக்னேஷியஸ் ஆகியோர் மீது ஸாகிர் போலிசில் புகார் அளித்திருக்கிறார்.

அதன் தொடர்பில் இந்த ஐவரும் ஸாகிரிடம் மன்னிப்புக்கோர வேண்டும் என்று சட்ட நிறுவனம் வழியாக கோரிக்கைக் கடிதம் வழங்கப்பட உள்ளது என அக்பருதின் அண்ட் கோ சட்ட நிறுவனம் தெரிவித்தது.

அமைச்சர் குலசேகரனிடம் கோரிக்கைக் கடிதம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற நால்வருக்கும் விரைவில் அது கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!