மீண்டும் ஏவுகணைச் சோதனை; கொரியப் பேச்சுவார்த்தை முறிவு

வடகொரியா நேற்று குறைந்தபட்சம் இரண்டு ஏவுகணைகளைக் கடலுக்குள் செலுத்தி சோதனை செய்ததாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் தென்கொரியா சுதந்திர தினத்தைக் கொண்டாடியது. அதில் அதிபர் மூன் ஜே இன் ஆற்றிய உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்த வடகொரிய பேச்சாளர் தென்கொரிய அதிபரை ‘அதிகப்பிரசங்கி’ என்று சாடியதுடன் கொரியாக்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் முறிந்துபோனதாக வடகொரியா குறிப்பிட்டது.

அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கடந்த வாரம் முதல் மேற்கொண்டுள்ள கூட்டு ராணுவப் பயிற்சியை போருக்கான ஒத்திகை என்று குறிப்பிட்ட வடகொரியா, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.

நேற்று பரிசோதித்தவற்றுள் ஒன்று குறுந்தொலைவு ஏவுகணையாக இருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தென்கொரியா மற்றும் ஜப்பானுடன் அமெரிக்கா இதுகுறித்து ஆலோசித்து வருவதாக மற்றொரு அதிகாரி தெரிவித்தார். அண்மைய ஏவுகணைச் சோதனைகளால் உடனடி பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏதுமில்லை என்று ஜப்பானிய தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது.

இதற்கிடையே, அண்மையில் வடகொரியா ஏவுகணைகளைச் செலுத்தியதைப் பற்றி விவாதிக்க தென்கொரியாவின் தேசியப் பாதுகாப்பு மன்றம் கூடவுள்ளது.

வடகொரியாவின் அணுவாயுதத் திட்டங்களின் தொடர்பில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது தற்போது சிக்கலாகியுள்ளது.

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி 2045ஆம் ஆண்டுக்குள் இரு கொரியாக்களையும் ஒன்றுபடுத்த தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் உறுதிபூண்டதற்கு அடுத்த நாளான நேற்று, அந்த முயற்சிக்கு வடகொரியா மறுப்பு தெரிவித்தது.

இரு கொரியாக்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் முறிவதற்கும் கடந்த ஆண்டு நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டில் எடுக்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் இக்கட்டான நிலை ஏற்படுவதற்கும் தென்கொரியாதான் காரணம் என வடகொரிய பேச்சாளர் கூறினார். தென்கொரியாவுடன் பேச ஏதுமில்லை என அமைதிக்கான மறுஒருங்கிணைப்புக் குழுவின் வடகொரிய பேச்சாளர் குறிப்பிட்டதாக கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!