ஃபிஜி பிரதமர்: ஆஸ்திரேலியப் பிரதமர் இழிவுபடுத்துகிறார்

ஃபிஜி பிரதமர்: ஆஸ்திரேலியப் பிரதமர் இழிவுபடுத்துகிறார்

1 mins read
b2395b09-af7c-4b45-9fdf-42b5cb7790cd
பசிபிக் தீவுகள் மாநாட்டின்போது நடைபெற்ற தலைவர்களுக்கான ஒன்றுகூடலில் (இடமிருந்து வலம்) நியூசிலாந்துப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன், ஃபிஜி பிரதமர் ஃபிராங்க் பைனிமராமா, சமோவா பிரதமர் துயிலேப்பா ஐயோனோ, மைக்ரோனீசியா கூட்டரசு மாநிலங்கள் பிரதமர் டேவிட் பனுவேலோ. படம்: இபிஏ -

சிட்னி: பசிபிக் தீவுகளை ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மொரிசன் நடத்தும் விதம் இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக ஃபிஜி பிரதமர் ஃபிராங்க் மைனிமராமா குறைகூறியுள்ளார். மாறாக, சீனா நீட்டும் நட்புக் கரம் வரவேற்கத்தக்கதாக இருக்கிறது என பசிபிக் மாநாட்டுக்குப் பிறகு அவர் தெரிவித்தார். பருவநிலை மாற்றம் காரணமாக பசிபிக் தீவுகள் ஆபத்தை எதிர்நோக்குகின்றன.

ஆஸ்திரேலியா அதன் கரிம வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்றும் கரித் துறையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பசிபிக் நாடுகளின் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் பசிபிக் நாடுகளுக்கு ஆஸ்திரேலியா கொடுத்துவரும் பணத்தைப் பற்றி திரு மோரிசன் பேசியது ஃபிஜி பிரதமருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

பசிபிக் தீவுகள் மாநாட்டின்போது நடைபெற்ற தலைவர்களுக்கான ஒன்றுகூடலில் (இடமிருந்து வலம்) நியூசிலாந்துப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன், ஃபிஜி பிரதமர் ஃபிராங்க் பைனிமராமா, சமோவா பிரதமர் துயிலேப்பா ஐயோனோ, மைக்ரோனீசியா கூட்டரசு மாநிலங்கள் பிரதமர் டேவிட் பனுவேலோ. படம்: இபிஏ