கிப்ரல்டாரைவிட்டுப் புறப்பட்ட ஈரானிய எண்ணெய்க் கப்பல்

கிப்ரல்டாரைவிட்டுப் புறப்பட்ட ஈரானிய எண்ணெய்க் கப்பல்

1 mins read
f328a11a-9ae4-492e-948e-d31f73e2b899
-

பிரிட்டனின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்ரால்டர் தீவு, தனது தடுப்புக்காவலில் இருந்துவந்த ஈரானிய எண்ணெய்க் கப்பலை விடுவித்துள்ளது. அதனை விடுவிக்க வேண்டாம் என்று அமெரிக்கா கோரியதற்கு ஜிப்ரால்டர் செவிசாய்க்கவில்லை.

ஜூலை மாதம் 4ஆம் தேதி ஜிப்ரால்டர் கைப்பற்றிய 'கிரேஸ் 1' என்ற அந்தக் கப்பல், நேற்று மாலை அந்நாட்டைவிட்டுப் புறப்பட்டது. அந்தக் கப்பலுக்கு 'ஏட்ரியன் அரிரா 1' என்ற புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகத் தடைகளை மீறும் விதமாக அந்தக் கப்பல் சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு செல்வதாகச் சந்தேகித்து ஜிப்ரால்டர் அதிகாரிகள் அக்கப்பலைப் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்தக் கப்பலை விடுதலை செய்ய ஜிப்ரால்டர் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இந்த முடிவை எதிர்க்கும் அமெரிக்கா, அந்தக் கப்பலைத் தொடர்ந்து தடுத்து வைத்திருக்குமாறு ஜிப்ரால்டரைக் கேட்டுக்கொண்டது. ஆயினும், ஈரானுக்கு எதிரான அமெரிக்க வர்த்தகத் தடைகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் செல்லுபடியாகாது என்று ஜிப்ரால்டர் பதிலளித்தது.

அந்தக் கப்பலிலுள்ள 28 பணியாளர்கள் இந்தியா, ரஷ்யா, பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள். கப்பலின் மாலுமி ஓர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.