பங்ளாதேஷ் தீ: 10,000 பேர் வீடு இழந்தனர்

டாக்கா: ராட்சத தீ மூண்டு, மக்கள் நெரிசலாக வாழ்ந்து வந்த சேரிப் பகுதி ஒன்றை நாசம் செய்ததில் குறைந்தது 10,000 பேரின் வீடுகள் சேதமடைந்தன. பங்ளாதேஷின் தலைநகரான டாக்காவில் உள்ள மிர்பூர் வட்டாரத்தில் வெள்ளிக் கிழமை இரவு கொழுந்துவிட்டு எரிந்த தீ, கிட்டத்தட்ட 2,000 குடிசைகளை அழித்ததாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

பெரும்பாலான வீடுகளுக்கு பிளாஸ்டிக் கூரைகள் இருந்ததால் தீ வேகமாகப் பரவியது என்று நம்பப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் எடுத்ததாகவும் யாருக்கும் காயங்கள் இல்லை என்றும் கூறப்பட்டது.

சிலருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

சேரிவாசிகள் பெரும்பாலோர் குறைந்த வருமானம் ஈட்டும் துணித் தொழிற்சாலை ஊழியர்கள் என்று தெரிகிறது.

ஹஜ்ஜுப் பெருநாளைத் தங்களின் குடும்பங்களுடன் கொண்டாடச் சேரியிலிருந்த பலர் சென்றுவிட்டதால் தீ மூண்டபோது நிறைய குடிசைகள் காலியாக இருந்தன.

இல்லையேல் சேதம் இன்னும் பயங்கரமாக இருந்திருக்கும் என்று தலைமை போலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

நீண்ட விடுமுறையின்போது வீடுகளை இழந்த நிலையில், பலர் மூடப்பட்டிருந்த அக்கம்பக்கப் பள்ளிகளில் தற்காலிக முகாம்களை அமைத்துக்கொண்டு தஞ்சம் புகுந்தனர்.

அவர்களுக்கு உணவு, நீர், கழிவறை வசதி, மின்சார வசதி ஆகியவை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தங்குவதற்கு நிரந்தர ஏற்பாடுகள் செய்து தருவது குறித்து அதிகாரிகள் முயற்சி எடுத்து வருவதாகவும் கூறினர்.

மழைக்காலம் என்பதால் மக்கள் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் இடம்கூட சேறும் சகதியுமாக இருப்பதாகக் கூறப்பட்டது. மழையிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள சில குடும்பங்கள் நீர்புகா துணிகளைக் கொண்டு கூடாரங்கள் அமைத்துக்கொண்டன.

தீ ஏற்பட்டதற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருப்பதே டாக்காவில் அடிக்கடி தீச்சம்பவங்கள் ஏற்படக் காரணமாக உள்ளதென நிபுணர்கள் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!