பருவநிலை மாற்றத்திற்குப் பலியான முதல் பனிப்பாறைக்கு நினைவுச்சின்னம்

பருவநிலை மாற்றத்திற்குப் பலியான முதல் பனிப்பாறைக்கு நினைவுச்சின்னம்

1 mins read

ரெய்க்ஜவிக்: மாறிவரும் பருவநிலையில் அதன் முதல் பனிப்பாறையை இழந்துள்ள ஐஸ்லாந்து, அதன் நினைவாக ஒரு வெண்கலத் தகடை நேற்று வெளியிட்டது. 'ஒக்ஜொகல்' என்று பெயரிடப்பட்ட அப்பனிப்பாறை போலவே மேலும் 400 பாறைகளுக்கு இதே கதி நேரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றத்தில் பலியான பனிப்பாறைக்கு உலகிலேயே அமைக்கப்படும் முதல் நினைவுச்சின்னம் இது என்று கூறப்பட்டது. தகடில் 'எதிர்காலத்திற்கு ஒரு கடிதம்' என்ற சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பனிப்பாறைகள் குறைந்து வருவதையும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை வலியுறுத்தவும் இந்த வாசகம் பொறிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இழந்த பனிப்பாறையை இவ்வாறு ஒரு நினைவுச்சின்னம் மூலம் நினைவுகூருவதால் மனிதர்கள் செய்துள்ள 'சாதனையை' மனித இனம் என்றுமே நினைவில் கொண்டு பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதே தகடின் நோக்கம்.