கிரீஸை நோக்கிச் செல்கிறது ஈரான் எண்ணெய்க் கப்பல்

கிரீஸை நோக்கிச் செல்கிறது ஈரான் எண்ணெய்க் கப்பல்

2 mins read
6f53af7a-7621-4e8e-9ba5-56d757daa719
பின்லாந்துக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டுள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சர் முகம்மது ஜாவாட் ஸரிஃப் (இடது). ஃபின்லாந்து வெளியுறவு அமைச்சர் பெக்கா ஹாவிஸ்ட்டோவை ஹெல்சிங்கியில் சந்தித்துப் பேசினார். படங்கள்: ராய்ட்டர்ஸ் -

துபாய்: ஈரானிய எண்ணெய்க் கப்பல் ஒன்றை ஜிப்ரால்டர் நிர்வாகம் தடுத்து நிறுத்தி வைத்து பின்னர் விடுவித்ததது.

ஈரானின் எண்ணெய்க் கப்பல் விடுவிக்கப்பட்ட சம்பவம் முற்றிலும் எதிர்பார்க்கப்படாத ஒன்று என்றும் அக்கப்பலுக்கு கிரீஸ் மற்றும் மத்திய தரைக் கடல் பகுதியில் உள்ள துறைமுகங்களும் உதவக்கூடாது என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அதே வேளையில் அமெரிக்கா மீண்டும் ஈரானின் எண்ணெய்க் கப்பலைத் தடுத்து நிறுத்த முற்பட்டால் கடும் விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் ஈரான் வெளியுறவு அமைச்சர் முகம்மது ஜாவாட் ஸரிஃப் ஃபின்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டபோது அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், "அமெரிக்கா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான ராணுவத்தின் மோதல் போக்கு பற்றி பெரிதாக எதுவும் கூறவில்லை. எனினும் அமெரிக்கா இப்பகுதியில் ராணுவப் பதற்றத்தை நீட்டிக்க விரும்புவதாகக் கூறினார்.

விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய்க் கப்பல் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் திட்டமிட்டபடி கிரீஸ் நாட்டின் கலாமாதாவுக்குச் சென்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டனின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்ரால்டர் தீவு, தனது தடுப்புக்காவலில் இருந்துவந்த ஈரானிய எண்ணெய்க் கப்பலை விடுவித்துள்ளது. அதனை விடுவிக்க வேண்டாம் என்று அமெரிக்கா கோரியதற்கு ஜிப்ரால்டர் செவிசாய்க்கவில்லை. ஜூலை மாதம் 4ஆம் தேதி ஜிப்ரால்டர் கைப்பற்றிய 'கிரேஸ் 1' என்ற அந்தக் கப்பல், நேற்று மாலை அந்நாட்டைவிட்டுப் புறப்பட்டது. அந்தக் கப்பலுக்கு 'ஏட்ரியன் அரிரா 1' என்ற புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகத் தடைகளை மீறும் விதமாக அந்தக் கப்பல் சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு செல்கிறது என்ற சந்தேகத்தின்பேரில் ஜிப்ரால்டர் நிலைய அதிகாரிகள் அக்கப்பலைத் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அந்தக் கப்பலை விடுவிக்க ஜிப்ரால்டர் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இந்த முடிவை எதிர்க்கும் அமெரிக்கா, அந்தக் கப்பலைத் தொடர்ந்து தடுத்து வைத்திருக்குமாறு ஜிப்ரால்டரைக் கேட்டுக்கொண்டது. ஆயினும், ஈரானுக்கு எதிரான அமெரிக்க வர்த்தகத் தடைகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் செல்லுபடியாகாது" என்று ஜிப்ரால்டர் பதிலளித்தது.

அந்தக் கப்பலிலுள்ள 28 பணியாளர்கள் இந்தியா, ரஷ்யா, பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

கப்-ப-லின் மாலுமி ஓர் இந்-தி-யர் என்-பது குறிப்-பி-டத்-தக்-கது.