ஹாங்காங் தலைவர்: அமைதி வழிப் போராட்டம் ஒரு திருப்பு முனை

ஹாங்காங் தலைவர்: அமைதி வழிப் போராட்டம் ஒரு திருப்பு முனை

2 mins read

ஹாங்காங்: அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் அமைதியான வழியில் நடந்து வருவது ஒரு திருப்பு முனை என்று அந்நாட்டின் தலைமை நிர்வாக அதிகாரி கேரி லாம் (படம்) நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமைதியைக் கட்டிக்காக்க அமைதி வழியைக் கடைப்பிடிக்கும் போராட்டக்காரர்களிடம் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி போலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்கும்.

கடந்த ஞாயிறன்று நூறாயிரத்திற்கு மேற்பட்ட போராட்டக்காரர்கள் அமைதிப் பேரணியில் ஈடுபட்டனர். பெரும் மழையிலும் 11 வாரமாக அந்த ஆர்ப்பாட்டப் பேரணி தொடர்ந்தது. இதுகுறித்துப் பேசிய திருமதி லாம், "நாங்கள் முக்கிய அம்சங்களைக் கொண்ட இரு பணிகளில் ஈடுபட்டிருப்பதை விளக்கிக் கூறியுள்ளேன்," என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

"அதில் ஒன்று மிகவும் முனைப்புடன் போலிசாருக்கு எதிரான புகார்களை விசாரித்து உண்மை கண்டறியும் நடவடிக்கை," என்றார்.

ஹாங்காங்கில் கடந்த ஜூன் மாதம் தற்போது கைவிடப்பட்டிருக்கும் குற்றவியல் சந்தேகப் பேர்வழிகளை நாடு கடத்துவது தொடர்பான சட்ட மசோதா பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் இதன் தொடர்பில் பரந்த அளவில் தங்களுடைய உரிமைகள் பறிக்கப்படுவதாக ஹாங்காங் மக்கள் கொண்ட கவலை போராட்டமாக வெடித்தது.

ஹாங்காங் கடந்த 1997ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டபோது அந்நாடு, "ஒரு நாடு, இரு அரசு முறைகள் என்ற அடிப்படையில் சீனாவுக்குத் திருப்பி வழங்கப்பட்டது. இதன்படி ஹாங்காங் சுதந்திரமான நீதித்துறையையும் அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முறையையும் கொண்டிருக்கும் ஒரு நடைமுறை ஏற்படுத்தப்பட்டது. இன்று ஹாங்காங் பெருவிரைவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதேபோல் நாளை உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், நாடு கடத்தும் வரைவு சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பட்டம் நடத்தவுள்ளனர்.

அதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமையன்று கணக்காய்வாளர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். பின்னர், ஞாயிறன்று ஜனநாயக ஆதரவு ஆர்வலர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர்.

ஹாங்காங்கில் உள்ள இந்தக் குழப்பம் வெளிநாடுகளுக்கும் பரவி உள்ளது. இதன் தொடர்பில் டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் சீனாவில் இருந்து ஹாங்காங்கில் நடைபெறும் போராட்டங்களுக்கு எதிரான சமூக ஊடக இயக்கத்தைத் தடைசெய்துள்ளன.

சென்ற ஞாயிறன்று நிகழ்ந்த மாபெரும் போராட்டத்தில் 1.7 மில்லியன் பேர் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இத-னால் ஹாங்-காங்-கில் போராட்ட உணர்வு மக்-க-ளி-டையே இன்-னும் பெரும் அள-வில் இருப்-ப-தா-கக் கூறப்-ப-டு-கிறது.