சீனா: தூதரக ஊழியர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

பெய்ஜிங்: சட்டங்களை மீறியதால் பிரிட்டி‌ஷ் தூதரக ஊழியர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சு நேற்று கூறியது.

ஏற்கெனவே விரிசல் அடைந்துள்ள சீன, லண்டன் உறவை இவ்விவகாரம் மேலும் மோசமடையச் செய்யும் என்று கூறப்படுகிறது.

28 வயது சிமோன் செங் (படம்)  என்ற அந்த ஊழியர் 15 நாள் காவலில் சென்சென் நகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சர் ஹெங் சுவாங் கூறினார்.

மேலும் இது சீனாவின் உள் விவகாரம் என்றும் ராஜதந்திர ரீதியிலான பிரச்சினை இல்லை என்றும் அவர் கூறினார்.

வேலைநிமித்தமாக முதல் நாள்  ஹாங்காங் எல்லையில் உள்ள சீனாவின் சென்சென் நகருக்குச் சென்ற சிமோன் செங் என்ற அந்த தூதரக ஊழியர் ஆகஸ்ட் 9ஆம் தேதி பணிக்குத் திரும்பவில்லை.

இதைத்தொடர்ந்து சிமோன் செங் காணாமற்போனதை அவரது குடும்பத்தினர் ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தினர்.