மியன்மார் உள்நாட்டுச் சண்டையில் 19 பேர் பலி

மியன்மார் உள்நாட்டுச் சண்டையில் 19 பேர் பலி

1 mins read

யங்கூன்: வடக்கு மியன்மாரில் ராணுவத் துருப்புகளுக்கும் சிறுபான்மையினருக்கும் இடையில் கடந்த வாரம் மூண்ட சண்டையில் 19 பேர் கொல்லப்பட்டதாகவும் 2,000 பேருக்கு மேற்பட்டோர், வீடுகளை விட்டு வெளியேற நேர்ந்ததாகவும் அரசாங்க அதிகாரிகள் நேற்று கூறினர்.

இச்சண்டையில் வீடுகளை விட்டுச் சென்ற மக்கள் ஷான் மாநிலத்தின் வடக்கே லாஷியோ நகரத்தைச் சுற்றியுள்ள மடாலயங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தங்களின் தேவைக்காக அவர்கள் உதவிக் குழுக்கள் மற்றும் அரசாங்கத்தைச் சார்ந்து உள்ளதாகவும் தொண்டூழியர்கள் தெரிவித்தனர்.