தோக்கியோ: துப்புரவு ஊழியரின் தவற்றால் ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் சென்டாயில் இருந்து கிளம்பிய புல்லட் ரயில் கதவு மூடப்படாமல் மணிக்கு 280 கி.மீட்டர் வேகத்திற்குச் சென்றதாக ரயில் சேவை நிறுவனமான கிழக்கு ஜப்பான் ரயில்வே நிறுவனம் கூறியுள்ளது.
தானியக்கம் அல்லாத சாதனத்தைத் துப்புரவு ஊழியர் மூட மறந்துவிட்டதால் ரயிலின் ஒரு முனையில் கதவுகள் மூடப்படாமல் சுமார் 40 விநாடிகளுக்கு ரயில் சென்றதாகவும் யாரும் காயமடையவில்லை என்றும் நிறுவனம் கூறியது.

