சீனா: அமெரிக்க நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும்

சீனா: அமெரிக்க நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும்

1 mins read

பெய்ஜிங்: தைவானுக்கு எஃப்-16 ரக போர் விமானங்கள் வழங்குவதில் தொடர்புடைய அமெரிக்க நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று சீனா எச்சரித்துள்ளது.

தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று தைவானை சீனா கூறி வரும் நிலையில், தைவானுக்கு எஃப்-16 ரக போர் விமானங்கள் 66 உள்ளிட்ட எட்டு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான போர் விமானங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்ததையடுத்து சீனா இவ்வாறு கூறியுள்ளது.

தைவானிய வான்பகுதியில் சீனாவின் ஊடுருவல் அதிகரித்து வரும் நிலையில், தைவான் தன் வான்பகுதி தற்காப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.