ஸாகிர் நாயக்கின் நிரந்தரவாசத் தகுதி: அதிகாரிகள் முடிவெடுப்பர்

சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகிர் நாயக்கின் நிரந்தரவாசத் தகுதியை ரத்து செய்வதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் முடிவை அதிகாரிகளிடம் விட்டுவிடுவதாக மலேசியாவின் பிகேஆர் கட்சி அறிவித்துள்ளது.

சட்டவிரோதப் பணப் பரிவர்த் தனைக்காக இந்தியாவால் தேடப் பட்டு வரும் ஸாகிர் நாயக், நிரந்தரவாசத் தகுதியுடன் மலேசியாவில் வசித்து வருகிறார். இந்நிலையில், மலேசியாவில் வாழும் பிற சமயத்தவரைத் தாக்கியும் பிரிவினையைத் தூண்டும் வகையிலும் அவர் பேசியதாக எழுந்த புகாரை அடுத்து, அவரை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் எனக் குரல்கள் கிளம்பியுள்ளன. 

இதையடுத்து, நாட்டின் எந்தப் பகுதியிலும் பொதுமக்கள் மத்தியில் பேச ஸாகிருக்குத் தடை விதிக் கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவரும் தமது பேச்சிற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், ஸாகிரின் நிரந்தரவாசத் தகுதியை ரத்து செய்வது தொடர்பாக பிகேஆர் கட்சி நேற்று கூடிப் பேசியது. அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் ஏற்பாட்டுச் செயலாளர் நிக் நஸ்மி நிக் அகமது, ஸாகிரின் நிரந்தரவாசத் தகுதியை தொடர்வதா இல்லையா என்பதை அதிகாரிகளே தீர்மானிப்பர் என்று தெரிவித்தார்.

Loading...
Load next