மலேசிய அமைச்சரவையில் மாற்றம் விரைவில் ஏற்படலாம்

மலேசியாவின் அமைச்சரவையில் மாற்றம் செய்யவேண்டிய காலம் நெருங்கிவிட்டதாக அந்நாட்டின் பிரதமர் மகாதீர் முகம்மது அறிவித்திருக்கிறார்.

புதன்கிழமை ( ஆகஸ்ட் 21) நிகழ்ந்த அமைச்சரவைக் கூட்டத்தில் டாக்டர் மகாதீர் இதனை அறிவித்ததாகத் தகவல்கள் கசிந்ததை ‘த ஸ்டார்’ பத்திரிகை தனது செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

“அமைச்சரவைக் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்த அறிவிப்பு வெளிவந்தது. அமைச்சர்கள் சிலரின் பொறுப்புகள் மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது,” என்று ‘த ஸ்டார்’ தெரிவித்தது.

மலேசியாவின் ஆளுங்கூட்டணியான பக்கத்தான் ஹரப்பானின் உறுப்புக் கட்சிகளின் தலைவர்களை டாக்டர் மகாதீர் இன்று மாலை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பாக போட்டியிட்ட டாக்டர் வீ ஜீ செங் 15,086 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். படம்: பெர்னாமா

17 Nov 2019

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் வெற்றி

ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச பலத்த பாதுகாப்புடன் தமது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றார். படம்: ஏஎஃப்பி

17 Nov 2019

வாக்காளர்கள் சென்ற பேருந்துகள் மீது துப்பாக்கிச்சூடு, கல்வீச்சு