வன்முறை; ஹாங்காங் வங்கிகள் கண்டனம்

ஹாங்காங்: ஹாங்காங்கில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் அதன் நிலைத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நாளேடுகளில் முழுப் பக்க விளம்பரங்களை வெளியிட்டுள்ள ஹாங்காங்கின் சில பெரிய வங்கிகள், வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

ஹாங்காங்கில் சட்டம், ஒழுங்கு நிலை நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவை வலியுறுத்தியுள்ளன.

ஹெச்எஸ்பிசி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், பேங்க் ஆஃப் ஈஸ்ட் ஏஷியா ஆகிய வங்கிகள் நேற்று முக்கிய நாளேடுகளில் விளம்பரங்களை வெளியிட்டிருந்தன.

கடந்த மாதம் ஆர்ப்பாட்டக் காரர்களை ஒரு கும்பல் தாக்கியது. இதனால் தாக்கப்பட்ட அதே சுரங்க ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டக் காரர்கள் புதன்கிழமை அன்று மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதுவரை வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. குற்றச்செயலில் ஈடுபடும் சந்தேக நபர்களை விசாரணைக்கு சீனாவுக்கு அனுப்பி வைக்க இந்த மசோதா வகை செய்கிறது.

அன்று முதல் இன்று வரை ஆர்ப்பாட்டங்கள் ஓயாமல் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே ஹாங்காங்கில் நல்லிணக்கத்தை வலியுறுத்தி வங்கிகள் முழுப் பக்க விளம்பரங்களை வெளியிட்டுள்ளன. ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் அனைத்துலக நிதி நிலையமாக ஹாங்காங் தொடர்ந்து கட்டிக்காக்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளது.

ஹெச்எஸ்பிசி வங்கி, வன் முறைக்குப் பதிலாக பேச்சு வார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!