அமெரிக்கா-வடகொரியா பேச்சு விரைவில் தொடங்கும்

அமெரிக்கா-வடகொரியா பேச்சு விரைவில் தொடங்கும்

1 mins read

சோல்: அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே அணுவாயுதக் களைவு தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என்று தென்கொரியாவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா-வடகொரிய பேச்சு வார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. ஆனால் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கி நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று தென் கொரியாவின் துணை தேசிய பாது காப்பு ஆலோசகருமான கிம் யூன்-சோங் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக சோலில் அமெரிக்காவுக்கான வடகொரிய தூதர் ஸ்டீஃபன் பீகனை அவர் சந்தித்துப் ேபசினார்.

"வடகொரியாவும் அமெரிக்காவும் விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்கும் என்று நம்புகிறேன். அதில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும்," என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் ஹனோயில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் 2வது முறையாக சந்தித்துப் பேசினர்.

ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

அதன் பிறகு இரு தலைவர்களும் மீண்டும் சந்திப்பார்கள் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டது.