கோலாலம்பூர் விமான நிலையத்தில் குழப்பம்

கோலாலம்பூர்: கோலாலம்பூர் விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் நேற்று இருபதுக்கும் ேமற்பட்ட விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. புதன்கிழமை இரவு விமான நிலையத்தில் பயண ஆயத்த சோதனை மற்றும் பயணப் பெட்டிகளை ஒப்படைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன.

இதனால் பிரதான மற்றும் மலிவுக் கட்டண விமான நிலையம் ஆகிய இரண்டிலும் சுமார் இருபது விமானச் சேவைகள் ரத்தாகின. விமானத் தகவல்களை தெரிவிக்கும் மின்திரை, நுழைவுச் சீட்டுகள் வழங்கும் முகப்பு சேவைகள், பெட்டிகளைக் கையாளும் இயந்திரங்கள், இணையத் தொடர்பு போன்றவை பாதிக்கப்பட்டதாக மலேசிய விமான நிலைய நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

“கோளாறு ஏற்பட்டதிலிருந்து எங்கள் குழு 24 மணி நேரமாக முழு மூச்சுடன் பணியாற்றி வருகிறது. கோளாறுகளை சரி செய்வது மட்டுமல்லாமல் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகளை குறைக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன,” என்று அறிக்கை குறிப்பிட்டது.

இதற்கிடையே நேற்று காலை விமான சேவைகள் வழக்க நிலைக்குத் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.