ஜோகூர் பாலத்தில் நெரிசல்; மலேசிய அரசு ஆலோசனை

ஜோகூர்: சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் கடற்பாலத்தில் அடிக்கடி ஏற்படும் நெரிசலுக்குத் தீர்வு காண மலேசிய அரசாங்கம் ஆலோசனை நடத்தியிருக்கிறது. இணைப்புப் பாலத்தை விரிவுபடுத்துவது, கூரை வேயப்பட்ட நடைபாதைகளை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்த பிரதமர் மகாதீர் தலைமையில் கூடிய சிறப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூருடன் இணைக்கும் உட்லண்ட்ஸ் கடற்பாலம், துவாசில் உள்ள இரண்டாவது பாலம் ஆகிய இரண்டிலும் நெரிசல் தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது. சென்ற புதன்கிழமை முதல் முறையாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நெரிசலைக் குறைப்பதற்கான பல்வேறு வழிகள் ஆராயப்பட்டன.

Loading...
Load next